பி.எட்., படித்த சத்துணவு பணியாளர்கள் புலம்பல்
பி.எட்., படித்த சத்துணவு பணியாளர்கள் புலம்பல்
பி.எட்., படித்த சத்துணவு பணியாளர்கள் புலம்பல்
ADDED : ஆக 29, 2011 12:55 AM
தேனி : பி.எட்., படித்த சத்துணவு பணியாளர்கள், ஆசிரியர் பணி கிடைக்காததால் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் அமைப்பாளர்களாக பணியாற்றி வருவோரில், 341 பேர் பி.எட்., படித்தவர்கள். இவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க, சிறப்பு தேர்வு நடத்த அரசு அனுமதி அளித்தது. நுழைவுச் சீட்டுகள், 2011 பிப்., 2ல் வழங்கப்பட்டன. நுழைவுச் சீட்டு கிடைக்காத சிலர், ஐகோர்ட்டில் தடை பெற்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்வு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மூலம், தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்து எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு' கோர்ட் உத்தரவிட்டது. பத்து வாரங்களாகியும், நடவடிக்கை இல்லாததால் பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.