/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் தி.மு.க., இருக்காதுஉள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் தி.மு.க., இருக்காது
உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் தி.மு.க., இருக்காது
உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் தி.மு.க., இருக்காது
உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் தி.மு.க., இருக்காது
ADDED : செப் 17, 2011 01:00 AM
கிள்ளை : ''உள்ளாட்சித் தேர்தலுடன் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்'' என சமூக நலத்துறை அமைச்சர் பேசினார்.கிள்ளையில் அ.தி.
மு.க., சார்பில் அண்ணா துரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள், முன்னாள் ஒன்றிய செயலர் ரமேஷ், ஜெ., பேரவை மாவட்டச் செயலர் மாரிமுத்து, துணைச் செயலர் தேன்மொழி, பொருளாளர் அசோகன் முன்னிலை வகித்தனர்.தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஜெ., பேரவை செயலர் பொன்னுசாமி, கிள்ளை நகர துணைச் செயலர் நடராஜன், பொருளாளர் சம்மந்தம் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்பேசியதாவது:தமிழகம் தி.மு.க., குடும்ப அரசியல் ஆதிக்கத்தால் அடிமையானது. தரமற்ற பொருட்களை இலவசம் என்ற பெயரில் அறிவித்து விட்டு முழுமைப்படுத்தாமல் மக்களை ஏமாளியாக்கியவர் கருணாநிதி. ஆனால் ஜெ., இலவசம் என்று கூட சொல்லக்கூடாது என பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலுடன் தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.