வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி
வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி
வெனிசுலா: 2 சிறைகளில் கலவரம்: 7 பேர் பலி
ADDED : ஜூலை 21, 2011 07:22 AM
கார்கசஸ், வெனிசுலா நாட்டில் 2 வேறு சிறைகளில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
12 பேர் காயமடைந்தனர். லத்தீன் அமெரிக்க நாடான யாராகூவே மாகாணத்தில் உள்ள சான்பிலிப் கேபிமாஸ் சிறையில் நேற்று கைதிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இங்கு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பயங்கரவாத , சமூக குற்றங்களில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பயங்கர குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி ஒருவர் கொல்லப்பட்டார். இதே போன்று ஜூலியா மாகாணத்தில் உள்ள கேபிமாஸ் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் சிறைத்துறை போலீசார் கலவரத்தினை கட்டுப்படுத்தியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் உள்ளதே கலவரத்திற்கு காரணம் என சிறை நிர்வாகிகள் கூறினர்.