Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இரவில் சிறகடிக்கும் "பட்டாம் பூச்சிகள்'

இரவில் சிறகடிக்கும் "பட்டாம் பூச்சிகள்'

இரவில் சிறகடிக்கும் "பட்டாம் பூச்சிகள்'

இரவில் சிறகடிக்கும் "பட்டாம் பூச்சிகள்'

ADDED : ஆக 05, 2011 12:46 AM


Google News

கூடலூர் : பருவ மழை காலம் தீவிரமடைந்துள்ளதால், இரவில் பறக்கும் 'பட்டாம் பூச்சிகள்' கூடலூரில் அதிகரித்துள்ளன.

பட்டாம் பூச்சி போன்ற வடிவில், பெரிய இறகு கொண்டது 'மாத்' எனப்படும் பூச்சிகள். இவை பகலில் பறப்பதில்லை. இரவில் மட்டுமே பறக்கும் தன்மையுடையவை. 13 செ.மீ., அகலமுள்ள இவை இரண்டு அல்லது மூன்று வாரம் வரை உயிர் வாழக்கூடியவை. பகல் நேரத்தில் மர கிளை, செடிகளில் அமைதியாக ஒய்வெடுக்கும். நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படும் இவை இரவில் ஆங்காங்கே பறந்து செல்வதை காண முடியும். தற்போது கூடலூரில் மழை தீவிரமடைந்துள்ளதால், இத்தகைய பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் வண்ணமயமான அழகு அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்தியாவில் மிகப் பெரியளவிலான 'மாத்' , கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us