Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரேஷன் கார்டுள்ள அனைவருக்கும் இலவச கிரைண்டர், மிக்சி நிச்சயம்

ரேஷன் கார்டுள்ள அனைவருக்கும் இலவச கிரைண்டர், மிக்சி நிச்சயம்

ரேஷன் கார்டுள்ள அனைவருக்கும் இலவச கிரைண்டர், மிக்சி நிச்சயம்

ரேஷன் கார்டுள்ள அனைவருக்கும் இலவச கிரைண்டர், மிக்சி நிச்சயம்

ADDED : செப் 20, 2011 09:12 PM


Google News

விழுப்புரம் : தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக இனி லேப் டாப், சீருடைகள், எழுது பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுமென அமைச்சர் சண்முகம் பேசினார்.

விழுப்புரம் அடுத்த கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளியில் லேப் டாப் வழங்கும் விழா நடந்தது. சி.இ.ஓ., குப்புசாமி வரவேற்றார். கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். எம்.பி., ஆனந்தன், எம்.எல். ஏ.,க்கள் மோகன், நாகராஜன், ஆர்.டி.ஓ., பிரியா முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சண்முகம், 112 மாண வர்களுக்கு லேப் டாப்களை வழங்கி பேசியதாவது: பட்ஜெட் முடிந்ததும் அறிவித்தபடி திட்டங்களை ஜெ., துவக்கி வைத்தார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., வாக தேர்வாகி தொடர்ந்து இரண்டாவது முறை அமைச்சராகவும் பொறுப்பேற்க காரணமான மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



தொடர்ந்து உங்களுக்கு விசுவாசமாக இருந்து என்னால் முடிந்த நலத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பேன். வசதியான மாணவர்களுக்கே லேப் டாப் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், ஜெ., அறிவித்தபடி 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப் டாப் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல்வர் லேப் டாப் வழங்கியதோடு, மைக்ரோசாப்ட் மென் பொருளையும் கொடுத்து, லேப் டாப்பிற்கான பேக்கினையும் வழங்கியுள்ளார். இது உங்கள் பணத்தில் வழங்கப்படுகிறது. கடந்த தேர்தலின் போதே கம்ப்யூட்டர் வழங்கப்படுமென ஜெ., அறிவித்தார். இப்போது நிறைவேற்றி வருகிறார்.



இன்று விஞ்ஞான உலகம் வீட்டிலிருந்தபடியே உலகை படித்து, ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மாணவர்கள் கேள்வி கேட்கப் போகின்றனர். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப் டாப், கல்வி உதவித் தொகை 5000 ஆயிரம் ரூபாய், கலர் பென்சில், புத்தகப் பை, நான்கு செட் வண்ணச்சீருடைகள், செருப்புகள் என தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கார்டுள்ள அனைவருக்கும் கிரைண்டர், மிக்சி, பேன் கிடைக்கும். திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைய முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார். நகர செயலர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய நிர்வாகிகள் சீத்தா, மதுரைக்கண்னு, செந்தில்குமார், ஊராட்சி செயலர் ராஜி, கிளை செயலர்கள் கதிர்வேல், தாமோதரன், ரவி, பேரவை செயலர்கள் மலரழகன், பன்னீர், மாணவரணி சசிக்குமார், சேட்டு, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us