வீட்டு விலையை குறைக்க புதிய திட்டம்
வீட்டு விலையை குறைக்க புதிய திட்டம்
வீட்டு விலையை குறைக்க புதிய திட்டம்
ADDED : ஜூலை 24, 2011 10:25 AM
புதுடில்லி : குறைந்த அளவு சிமெண்ட், செங்கல்,கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இரண்டு அறைகள், அடுப்பங்கறை,கழிப்பறை கொண்ட 25 சதுர மீட்டர் கொண்ட வீடு கட்டுவதற்கான செலவு ரூ.1.85 லட்சம் மட்டுமே ஆகும். புதிய தொழில்நுட்பங்களுடன் அதிக விரைவாக வளர்ந்து வரும் கட்டிட தொழில்களுக்கு ஏற்ப வீடு கட்டுவதற்கான செலவை 20 சதவீதம் வரை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.