Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாசன வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம்

பாசன வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம்

பாசன வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம்

பாசன வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம்

ADDED : ஆக 05, 2011 12:28 AM


Google News
உடுமலை : பி.ஏ.பி., மண்டல பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளது குறித்த 'தினமலர்' செய்தி எதிரொலியாக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், உடுமலை பகுதியில் உடுமலை கிளை வாய்க்கால் மூலம் 14 ஆயிரத்து 612 ஏக்கரும், கோமங்கலம் கிளை வாய்க்காலில் 978 மற்றும் புதுப்பாளையம் கிளை வாய்க்காலில் 7,319 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உடுமலை கிளை வாய்க்காலில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், கடை மடை பகுதிகள் ஒவ்வொரு பாசனத்தின் போதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், விரைவில் பாசனம் துவங்க உள்ள நிலையில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம்(பாசன சபை)களின் கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் இருந்தன. கிளை வாய்க்கால்களிலிருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பகிர்மான வாய்க்கால்கள் பெரும்பாலும் மண் வாய்க்காலாகவே உள்ளது. பாசன காலம் முடிந்ததும் இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித பராமரிப்பு பணிகளும் இந்த வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படுவதில்லை.இதனால், வாய்க்கால் முழுவதும் மண் பரப்பாக மாறி முட்புதராகவும் பல இடங்களில் காணாமலும் போயுள்ளது. பாசனத்தின் உயிர்நாடியாக இருக்கும் மண் வாய்க்கால்களை பராமரிக்க பாசன சபைகளுக்கு நிதி அரசால் ஒதுக்கப்படுவதில்லை.பாசன காலம் துவங்கும் போது விவசாயிகள் அளிக்கும் பங்களிப்பு தொகையை கொண்டு பகிர்மான வாய்க்கால்கள் சீரமைக்கப்படுகிறது. பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில் கிளை வாய்க்கால் மற்றும் பகிர்மான வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.பகிர்மான வாய்க்கால்களை சீரமைக்க போதிய நிதி இல்லாததால் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் பாசன சபைகளின் கோரிக்கை குறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது. இதனையடுத்து, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் தண்ணீர் திறக்கப்படும் வாய்க்கால்களில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தூர்வார சாத்தியமுள்ள பகுதிகள் குறித்து அறிக்கை அளிக்க ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் புதுப்பாளையம் கிளை வாய்க்கால் பகுதிக்குட்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் வாய்க்கால்களை சீரமைக்க கருத்துரு தயாரித்து வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தன.அறிக்கை அடிப்படையில், உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.'ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு'கொங்கல்நகரம் ஊராட்சி தலைவர் சந்திரகலா கூறுகையில், ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள கிளை மற்றும் பகிர்மான வாய்க்கால்களை சீரமைக்க வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 4 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியில் வாய்க்கால்களில் வளர்ந்துள்ள செடி மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. மண் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. வாய்க்கால் கரையோரங்களிலும் முட்புதர்கள் நீர் நிர்வாக பணிகளுக்காக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், விவசாயிகளுக்கும் பயனளிப்பதாக உள்ளது', என்றார். பிற ஊராட்சிகளிலும் திட்டத்தின் கீழ் வாய்க்கால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இழுபறியாக இருக்கும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு

'தினமலர்' செய்தியால் இம்முறை விடிவு கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us