/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாகாமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் காமாட்சி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது.
காஞ்சி காமகோடி பீட சமஸ்தானத்திற்குட்பட்ட கிளை மடமாக கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள சங்கர மடம் திகழ்கிறது. இந்த சங்கர மடத்தின் மையப்பகுதியில் காமாட்சி அம்மன் நூதன நிர்மாண ஆலயம் நிறுவி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் நேற்று (11ம்தேதி) நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் (10ம்தேதி) யாகசாலா பிரவேசம், முதல்கால பூஜைஹோமம் மாலையில் இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை பூஜை, ஹோமம் நடந்த பின், கடம் புறப்பட்டு விமானத்தை சென்றடைந்து மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனை காட்டப்பட்டது. மாலையில் மகா அபிஷேகம் செய்விக்கப்பட்டு அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பணி கமிட்டி தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த காமாட்சி அம்மன் கோவில் நிர்மாணப் பணிகளை முதன்மை உபயதாரர் பிரிமியர் குழுமத்தின் மேலாண் இயக்குனர் சௌந்தர்ராஜன் செய்திருந்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கவிஞர் நவநீதம் தொகுத்து வழங்கினார்.


