/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தீப்பெட்டி ஆலையில் தீ : இருவர் காயம்தீப்பெட்டி ஆலையில் தீ : இருவர் காயம்
தீப்பெட்டி ஆலையில் தீ : இருவர் காயம்
தீப்பெட்டி ஆலையில் தீ : இருவர் காயம்
தீப்பெட்டி ஆலையில் தீ : இருவர் காயம்
ADDED : செப் 06, 2011 12:47 AM
சாத்தூர் : சாத்தூர் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
சாத்தூர் நேருஜி முதல் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் . இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை, முனியசாமி கோவில் தெருவில் உள்ளது. இங்கு நேற்று காலை 10 மணிக்கு , ரேக்குகளை சுத்தம் செய்யும் பணியில் ,அதே பகுதியை சேர்ந்த சந்தனமாரியம்மாள்,60, அலுவலக மேனேஜர் ஜேம்ஸ்,55, ஈடுபட்டிருந்தனர். ரேக்குகளை இறக்கும் போது தவறி விழுந்தது. அப்போது தீக்குச்சி மருந்து வெடித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தீ வேகமாக பரவ, சாத்தூர் தீயணைப்பு படையினர் அணைத்தனர். காயமடைந்த இருவரும் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.