/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வைப்பாறு பாலம் குழி சீரமைப்பு : "தினமலர் 'செய்தி எதிரொலிவைப்பாறு பாலம் குழி சீரமைப்பு : "தினமலர் 'செய்தி எதிரொலி
வைப்பாறு பாலம் குழி சீரமைப்பு : "தினமலர் 'செய்தி எதிரொலி
வைப்பாறு பாலம் குழி சீரமைப்பு : "தினமலர் 'செய்தி எதிரொலி
வைப்பாறு பாலம் குழி சீரமைப்பு : "தினமலர் 'செய்தி எதிரொலி
ADDED : ஆக 02, 2011 11:31 PM
சாத்தூர் : சாத்தூரில் வைப்பாறு பழைய பாலம் குழி 'தினமலர்' செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
சாத்தூர் வைப்பாறு பழைய பாலம் கட்டப்பட்டு ஆண்டுகள் பல ஆவதால், அதில் செடிகள் முளைத்தும்,குழி விழுந்தும் சேதமடைந்தது. அப்பகுதியினர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பானசெய்தி 'தினமலர்' இதழில் கடந்த மாதம் 29 தேதி படத்துடன் வெளியானது. இதன் பயனாக வைப்பாறு பழைய பாலத்தில் ஏற்பட்ட குழியை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர். பாலத்தின் பக்க வாட்டு சுவர்களில் முளைத்திருந்த செடிகளையும் வெட்டி அகற்றினர்.