/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனிநென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி
நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி
நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி
நென்மேனி ஆலய விழா துவக்கம் : ஜூலை 30ல் தேர்பவனி
ADDED : ஜூலை 27, 2011 10:30 PM
சாத்தூர் : சாத்தூர் நென்மேனி இன்னாசியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியன தேர்பவனி ஜிலை 30ல் நடக்கிறது.
நென்மேனி இன்னாசியார் ஆலய விழா பாதிரியார்கள் ஜெகனிவாசகர், பிரிட்டோ சுரேஷ் (சாத்தூர்)முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. ஜூலை 29 ல் பாளையங்கோட்டை இயேசு சபை குருக்கள் தலைமையில் திருப்பலி மறையுரையும் நடக்கிறது. ஜூலை 30 ல் பாளையங்கோட்டை மறை மாவட்டம் இளையரசனேந்தல் பாதிரியார் அமிர்தராஜ் சுந்தர் தலைமையில் 'நற்செய்தியின் ஒளியில் இன்னாசியார்' தலைப்பில் அருளுரை நடக்கிறது. மதுரை வடக்கு மறை வட்ட அதிபர் அந்தோனிராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி , மறையுரையும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியன தேர்பவனி ஜிலை 30 இரவில் நடக்கிறது. ஜூலை 31ல் மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜா, தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் குமார் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. பால் பிரிட்டோ தலைமையில் நற்கருணை ஆசிர், கொடியிறக்கம் செய்யப்படுகிறது.