ADDED : ஆக 03, 2011 07:53 PM
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் விசா எண்ணிக்கை கடந்த நிதியாண்டில், 20 சதவீதம் சரிந்துள்ளது.
குறிப்பாக இந்திய மாணவர்களின் விசா எண்ணிக்கை 63 சதவீதம் சரிந்து விட்டது. விசா சட்டத்தில் திருத்தம், உயர் திறன் கொண்டவர்கள் மட்டுமே ஆஸி.,க்குள் வரலாம் என்ற கட்டுப்பாடு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.