/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மனு மீது விஜயகாந்த் நடவடிக்கை புதிய வழிதத்தடத்தில் பஸ் இயக்கம்மனு மீது விஜயகாந்த் நடவடிக்கை புதிய வழிதத்தடத்தில் பஸ் இயக்கம்
மனு மீது விஜயகாந்த் நடவடிக்கை புதிய வழிதத்தடத்தில் பஸ் இயக்கம்
மனு மீது விஜயகாந்த் நடவடிக்கை புதிய வழிதத்தடத்தில் பஸ் இயக்கம்
மனு மீது விஜயகாந்த் நடவடிக்கை புதிய வழிதத்தடத்தில் பஸ் இயக்கம்
ADDED : ஆக 22, 2011 12:27 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய
வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து துவக்க விஜயகாந்த் எம்.எல்.ஏ., நடவடிக்கை
எடுத்துள்ளார்.ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பெரிய பகண்டை,
தொழுவந்தாங்கல், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்
தங்கள் பகுதிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று விஜயகாந்த் எம்.எல்.ஏ.,
வுக்கு மனு அனுப்பியிருந்தனர்.
அதன் படி தடம் எண் 7, 41, 21 ஆகிய பஸ்களின்
வழித்தடத்தை நீடித்து இயக்க விஜயகாந்த் நடவடிக்கை எடுத்தார். இதனால்
கானாங்காடு, பெரியபகண்டை, இந்திராநகர், வேளானந்தல், தொழுவந்தாங்கல்,
அத்தியூர் பகுதியை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள். கடந்த 19ம் தேதி இந்த
வழித்தடத்தில் பஸ்கள் இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கராபுரம்
அரசு போக்குவரத்து கழக கிளைமேலாளர் அறிவண்ணல், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்
கதிர்தண்டபாணி, தே.மு. தி.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட துணை
செயலாளர் சண்முகம், கோதண்டபாணி, சீத்தாபதி, வெங்கடேசன், ரகு உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.