ADDED : ஆக 17, 2011 02:21 AM
கோத்தகிரி : கோத்தகிரி மசகல் கிராமத்தில் இ.கம்யூ., கட்சி கிளை கூட்டம்
நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மசகர் அரசு
பட்டுப்பண்ணையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை களைந்து, தேவையான
தொழிலாளர்களை நியமிக்கவேண்டும்; இப்பகுதியில் வசித்துவரும் ஆதிவாசி
குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உட்பட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகி சின்னம்மாள் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலர் ராஜூபெள்ளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். புதிய
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில், செயலராக சாந்தகுமார், துணை
செயலராக பாஸ்கரன் மற்றும் பொருளாளராக சின்னம்மாள் ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகி பாப்பாத்தி நன்றி கூறினார்.