ADDED : செப் 06, 2011 12:54 AM
சின்னமனூர் : அ.தி.மு.க.,வில் இளைஞர் பாசறையினர், மறைமுகமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இளைஞர்கள், இளம் பெண்களை அதிம் சேர்த்து, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச 2006 ல், அ.தி.மு.க.,வில் இளைஞர் பாசறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கிளை, வார்டுகள் வாரியாக இதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கட்சித்தலைமை உத்தரவின் பேரில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். தேர்தலுக்கு பின், இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் ஆலோசனை, பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை,என புலம்புகின்றனர். இது குறித்து தலைமைக்கு தெரிவிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு, இது சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.