/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிநீர் ஆதாரமாக மணல்மேடு : அகற்ற கிராமமக்கள் எதிர்ப்புகுடிநீர் ஆதாரமாக மணல்மேடு : அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
குடிநீர் ஆதாரமாக மணல்மேடு : அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
குடிநீர் ஆதாரமாக மணல்மேடு : அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
குடிநீர் ஆதாரமாக மணல்மேடு : அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 23, 2011 01:09 AM
தேனி : ராசிங்காபுரம் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மணல்மேட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து,ஊராட்சி தலைவர் சிங்கன், கிராம தலைவர் நாகையாசாமி மற்றும் கிராம மக்கள் கலெக்டர் பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: போடி தாலுகா ராசிங்காபுரம் ஊராட்சியில், கரியப்பகவுண்டன்பட்டி, கோடியபொம்மிநாயக்கன்பட்டி, வீரஜக்கம்மாள்புரம் ஆகிய உட்கடை கிராமங்கள் உள்ளன.
பத்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான கால்நடைகள் உள்ளன. மழை இல்லாததால் விளைநிலங்கள் தரிசு நிலமாகிவிட்டது.
இந்நிலையில் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், மணல் மேட்டுப்பகுதியில் இருந்துவியாபார நோக்கில் மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளுவதால் நீருற்று வற்றிவிடும். குடிநீரின்றி தவிக்க நேரிடும். எனவே மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.
கவுண்டன்குளம் கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் நடக்கிறது. ஊராட்சிக்குட்பட்ட குளத்தின் கரைகளை உடைத்து, காற்றாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதை தடுக்க வேண்டும்.