ADDED : ஆக 14, 2011 10:31 PM
பல்லடம் : திருப்பூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி சிறப்பு கூட்டம், பல்லடம் மணி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'சமச்சீர் கல்விக்கான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்று கூட்டங்கள் நடத்துவது; நில அபகரிப்பு என்ற பெயரில் அ.தி.மு.க., அரசு போடும் பொய் வழக்குகளை மாவட்ட வழக்கறிஞர் அணி துணையோடு தடுப்பது; திருப்பூரில் மாவட்ட நீதிமன்றம் விரைவில் அமைக்க வலியுறுத்துவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்லடம் நகராட்சி தலைவர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்ட காங்கயம், தாராபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.