/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியிருந்தால் ஃபோன் மூலம் புகார் செய்யுங்கள் :கலெக்டர் அழைப்புவி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியிருந்தால் ஃபோன் மூலம் புகார் செய்யுங்கள் :கலெக்டர் அழைப்பு
வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியிருந்தால் ஃபோன் மூலம் புகார் செய்யுங்கள் :கலெக்டர் அழைப்பு
வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியிருந்தால் ஃபோன் மூலம் புகார் செய்யுங்கள் :கலெக்டர் அழைப்பு
வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியிருந்தால் ஃபோன் மூலம் புகார் செய்யுங்கள் :கலெக்டர் அழைப்பு
ADDED : ஜூலை 15, 2011 12:54 AM
நாமக்கல்: வி.ஏ.ஓ., அலுவலகம் குறிப்பிட்ட நேரத்துக்கு திறக்காமல் இருந்தால், கலெக்டர் அலுவலகத்துக்கு ஃபோன் மூலம் புகார் செய்யலாம் என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வி.ஏ.ஓ.,க்கள் பொறுப்பு கிராமத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும், கூடுதல் பொறுப்பு கிராமங்களில் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களிலும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பணிபுரிய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 363 வி.ஏ.ஓ., பணியிடத்தில் 117 பணியிடங்கள் காலியா உள்ளதால், இதர வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 41 வி.ஏ.ஓ.,க்கள் அடிப்படை பயிற்சிக்கு சென்றுள்ளனர். கூடுதல் பொறப்பு கிராமத்தில், வி.ஏ.ஓ.,க்கள் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் பணிபுரியும் போது, அவரது பொறுப்பு கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் திறக்காமல் இருந்தால், அங்குள்ள மக்கள் மனுக்களை சம்பந்தப்பட்ட கிராமத்தில் வழங்க இயலாது. எனவே, சம்மந்தப்பட்ட கிராம வி.ஏ.ஓ., உதவியாளர்கள், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை திறந்து வைத்து மக்களிடம் மனுக்கள் பெற வேண்டும். இதை வி.ஏ.ஓ., உதவியாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். வி.ஏ.ஓ., அலுவலகம் குறிப்பிட்ட நேரத்தக்கு திறக்கப்படாமல் இருந்தாலோ அல்லது மூடப்பட்டிருந்தாலும், அதுகுறித்து 04286-28011 என்ற ஃபோன் எண்ணில் புகார் செய்யலாம். வி.ஏ.ஓ.,க்கள் பணி நியமனம் செய்ய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.