/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/சட்ட விரோதமாக மணல் எடுத்த வாகனம் பறிமுதல்சட்ட விரோதமாக மணல் எடுத்த வாகனம் பறிமுதல்
சட்ட விரோதமாக மணல் எடுத்த வாகனம் பறிமுதல்
சட்ட விரோதமாக மணல் எடுத்த வாகனம் பறிமுதல்
சட்ட விரோதமாக மணல் எடுத்த வாகனம் பறிமுதல்
ADDED : ஆக 07, 2011 01:48 AM
அரியலூர்: ஏலாக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் எடுத்த பொக்லைன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன் பறிமுதல் செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் மற்றும் செம்மண் எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் உத்தரவுபடி, அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், தாசில்தார் முத்துவடிவேல், ஆர்.ஐ., கலைவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு பொக்லைன், மூன்று டிராக்டர்கள் மற்றும் இரண்டு பைக்குகளையும், அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன் பறிமுதல் செய்துள்ளார்.