/உள்ளூர் செய்திகள்/தேனி/வரிபாக்கியில்லா சான்றுபெறுவதில் சிரமம்வரிபாக்கியில்லா சான்றுபெறுவதில் சிரமம்
வரிபாக்கியில்லா சான்றுபெறுவதில் சிரமம்
வரிபாக்கியில்லா சான்றுபெறுவதில் சிரமம்
வரிபாக்கியில்லா சான்றுபெறுவதில் சிரமம்
ADDED : செப் 25, 2011 09:43 PM
கூடலூர்:கூடலூர் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால், வேட்பு
மனுத்தாக்கலுக்கு தேவையான, வரிபாக்கியில்லா சான்று பெற முடியாமல்
தேர்தலில் போட்டியிடுபவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.கூடலூர் நகராட்சியில்
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் முதல் நாளான நேற்று
யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே
மனுத்தாக்கல் துவங்கியதால், தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள்
நகராட்சியில் இருந்து சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை
பாக்கியில்லா சான்று பெற மும்முரமாக உள்ளனர். ஆனால், நகராட்சியில் கமிஷனர்,
தலைமை எழுத்தர் பணியிடம் காலியாக இருப்பதால் சான்று உடனடியாக பெற
முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். பொறுப்பில் உள்ள போடி கமிஷனர் தேர்தல்
பணியில் அங்கு இருப்பதால், கூடலூர் நகராட்சியில் உள்ள அவசரப்பணியை செய்ய
முடியாத நிலை உள்ளது.