ADDED : செப் 30, 2011 11:13 PM
சென்னை: சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளைக்கு, தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது.
வரும் 10ம் தேதி ஐகோர்ட் திறக்கிறது. விடுமுறைக் கால கோர்ட், 4ம் தேதி செயல்படும். ஐகோர்ட்டுக்கு, அடுத்த வாரம் தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. 4ம் தேதி விடுமுறைக் கால கோர்ட் செயல்படுகிறது. அன்று, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் அரிபரந்தாமன், அக்பர்அலி, வாசுகி ஆகியோர், வழக்குகளை விசாரிப்பர். மதுரை ஐகோர்ட் கிளையில், நீதிபதிகள் கர்ணன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், வழக்குகளை விசாரிப்பர். 3ம் தேதி வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் விமலா இதை அறிவித்துள்ளார்.