ADDED : செப் 30, 2011 01:29 AM
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே மேலவரகுணராமபுரத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார், கண்ணன், ஆறுமுகம்.
நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியப்படி ரமேஷ் கண்ணன் குடும்பத்தை பற்றி தவறாக பேசியுள்ளார்.இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ரமேஷ் அருகிலிருந்த பாட்டிலால் கண்ணனை குத்தினார்.காயமடைந்த கண்ணன் மதுரைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆறுமுகம் புகாரில் தளவாய்புரம் போலீசார் ரமேசை கைது செய்தனர்.