/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஓட்டு போட போகும் போது கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்ஓட்டு போட போகும் போது கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்
ஓட்டு போட போகும் போது கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்
ஓட்டு போட போகும் போது கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்
ஓட்டு போட போகும் போது கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்
ADDED : செப் 28, 2011 12:41 AM
தூத்துக்குடி : உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்வோர் கட்டாயம் பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள சீட்டில் வாக்காளர்களின் போட்டோ, வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றுள்ள வார்டு எண், வாக்குச்சாவடி எண், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். வாக்காளர் அடையாள சீட்டுக்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து வழங்குவர். வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அடையாள சீட்டு விரைவில் (பூத் சிலிப்) வழங்கப்படும். வாக்காளர் அடையாள சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு வாக்குச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள சீட்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கு தேர்தல் நாள் அன்று அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளின் முகப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும். வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளையே வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம். தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியாற்ற அரசு அலுவலர்களுக்கு ஆணைகள் ஒரிரு நாளில் வழங்கப்பட உள்ளது. அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டும்.
பயிற்சி வகுப்புகள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும். தேர்தல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.