Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சபரிமலை பாதைகளில் சோதனை சாவடிகள்

சபரிமலை பாதைகளில் சோதனை சாவடிகள்

சபரிமலை பாதைகளில் சோதனை சாவடிகள்

சபரிமலை பாதைகளில் சோதனை சாவடிகள்

ADDED : செப் 23, 2011 09:08 PM


Google News
பத்தனம்திட்டா: பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக, சபரிமலையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதால், அங்கு செல்லும் பாதைகளில் சோதனை சாவடிகளை அமைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கோவிலுக்கு, தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச் சுழல் பாதிக்கப்படுகிறது. இதனால், சபரிமலை சன்னிதானம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், மாநில அரசும், வனத்துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்ஒரு பகுதியாக, சபரிமலைக்குச் செல்லும் பாதைகளில் பல இடங்களில் சோதனை சாவடிகளை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை கொண்டு சென்றால், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றுக்குப் பதிலாக எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருளால் தயாரிக்கப்பட்ட பைகளை வழங்குவர். அதேநேரத்தில், பூஜை பொருட்களான மஞ்சள் தூள், குங்குமம், கற்பூரம் உட்பட பல பொருட்கள், பிளாஸ்டிக் பையில் இருக்குமேயானால், அவற்றை எடுத்துச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பம்பை ஆற்றில் திருவேணி பகுதியில், வலை கட்டி நீரில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்கப்பட்டு, அவைகள் அகற்றப்படும். ஆனால், பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us