/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி மாணவர்கள்போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி மாணவர்கள்
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி மாணவர்கள்
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி மாணவர்கள்
போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இளையான்குடி மாணவர்கள்
ADDED : ஜூலை 31, 2011 10:51 PM
இளையான்குடி : இளையான்குடியில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இளையான்குடி நகரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் உள்ளது. சிவகங்கை , மானாமதுரை , ஆர்.எஸ்.மங்கலம், சாலைக்கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் கண்மாய்கரை, கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி வரும். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து காளையார்கோவில், காரைக்குடி, திருச்சி , தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் எதிரே வருவதால் கண்மாய்கரையில் இருந்து பஸ்ஸ்டாண்ட் வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பரமக்குடி செல்லும் ரோட்டில் தனியார் கல்லூரி , ஐ.டி.ஐ.,யும்,பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும் உள்ளன.காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் , மாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கண்மாய்கரையில் இருந்து சாலையூர் வரை ரோட்டை ஆக்கிரமித்து தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்கின்றனர்.
இதே நேரங்களில் வெளியூர்களிலிருந்து சரக்கு ஏற்றி வரும் லாரிகளும் ரோட்டில் நிறுத்தி கடைகளுக்கு சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் , பள்ளி, கல்லூரி வாகனங்களும் நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்தை சரிசெய்ய இங்கு போக்குவரத்து போலீசார் இல்லை.நாளுக்கு நாள் இளையான்குடியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.