முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி
முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி
முருகப்பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நெஞ்சம் பதற வேண்டாமா: பவன் கல்யாண் கேள்வி

புண்ணியம்
மதுரை என்பது மீனாட்சியம்மன் பட்டினம். மீனாட்சியம்மன் தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில் தான் உள்ளார். முருகனின் தந்தை சிவபெருமான், முதல் சங்கத்திற்கு தலைமையேற்று மதுரையில் தான் இருந்தார்.
தெய்விக பூமி
ஏன் தெரியுமா? 14ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மதுரையை மாலிக்காபூர் கொள்ளையடித்தான். அதன்பிறகு, 60 ஆண்டுகள் மீனாட்சியம்மன் கோவிலில் விளக்கு இல்லை. மூடப்பட்டிருந்தது. அது இருண்ட காலம். 14ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார் விஜயநகர இளவரசர் குமார கம்பணன்.
ஆபத்தானது
முருகனின் வடிவதத்தில் நமது அறம் தொடர்ந்து தளைக்கிறது. உலகை தீமை சூளும் போது அதை அறுப்பது அறம். எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம். அதன்பெயரே புரட்சி. உலகின் முதல் புரட்சி தலைவர் முருகப்பெருமான். அநீதியை அழித்ததால் அவர் புரட்சி தலைவர்.
போலி மதச்சார்பின்மை
நான் 14வது வயதில் சபரிமலைக்கு போனவன். தைப்பூசத்திற்கு திருத்தணிக்கு சென்றவன். நான் சென்னை மயிலாப்பூரில் படித்தபோது, நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு சென்றவன். சிறிது காலத்தில் எனக்கு மாற்றம் கிடைத்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். என்னுடைய 14 வயதிலேயே இதுபோன்ற கேள்விகளை சந்தித்தேன். எல்லோருக்கும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து இருப்பீர்கள். ஏனெனில் ஹிந்துக்கள் மதச்சார்பில்லாதவர்கள்.
துணிச்சல் உண்டா?
என் மத நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதை கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள்.
பதற வேண்டாமா?
60 ஆண்டுகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மூடிக்கிடந்ததை பார்த்துக் கொண்டு தானே இருந்தோம். அந்த துணிச்சலால் பேசுகிறார்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல. இங்குள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம்ம கடவுளை திட்டும் கூட்டம், காணாத கூட்டமாகிவிடும்.