ADDED : செப் 21, 2011 09:50 PM
விழுப்புரம்:கஞ்சா விற்ற கணவன், மனைவியை போலீசார் கைது
செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் சேகர்,50.
இவரது மனைவி இந்திரா,40. இருவரும் நேற்று முன்தினம் பனையபுரம் கூட்ரோடு,
முண்டியம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்தனர். அந்த வழியே
ரோந்து சென்ற விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்
ராமையா, பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேகர்,
இந்திரா இருவரையும் கைது செய்தனர்.