Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

ADDED : அக் 03, 2025 01:45 PM


Google News
Latest Tamil News
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பாஜ உண்மை கண்டறியும் குழுவில் இடம் பெற்று இருந்த அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து சம்பவ இடத்தில் பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான பாஜ உண்மை கண்டறியும் ஆய்வு செய்தது. இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் நேரில் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், இன்று (அக் 03) இந்த குழுவில் இடம் பெற்று இருந்த அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தது.

கரூர் மக்கள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர், மேலும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அவர்களின் மனதில் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கையை அதிகாரிகள் சமர்பிக்க வேண்டும். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணங்கள் என்ன?

நிகழ்விற்கு முன்னும், பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? ஆரம்ப விசாரணையின்படி, கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன? இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைப் பற்றி பரிந்துரைத்து சமர்பிக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதா, அதனை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். இந்த அவசர விஷயத்தில் சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us