/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கைபரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை
பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை
பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை
பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை
திருநெல்வேலி : பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழக ஹோமியோபதி மற்றும் சித்தா டாக்டர்கள் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக ஹோமியோபதி மற்றும் சித்தா டாக்டர்கள் சங்கத்தின் நெல்லை,தூத்துக்குடி, குமரி மாவட்ட கிளைகள் சார்பில் முப்பெரும் விழா ஜங்ஷன் புளூ ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
இந்திய மருத்துவ மத்திய சித்தா மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.சித்தா மருத்துவ கருத்தரங்கில் அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் பொது செயலாளர் பாஸ்கரன், பட்டதாரிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுசுல் அமீர், மாவட்ட தலைவர் ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினர். இந்திய மருத்துவ மத்திய சித்தா மெடிக்கல் கவுன்சிலர் உறுப்பினர் முத்துக்குமாரை பாராட்டி, சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் இன்பரசன், சித்தா பட்டதாரிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் கலிலூர் ரஹ்மான் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
இந்திய மருத்துவ மத்திய சித்தா மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் முத்துக்குமார் ஏற்புரை வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு சித்தா மருத்துவ கவுன்சில் மற்றும் ஹோமியோபதி மெடிக்கல் கவுனசில் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். பரம்பரை மருத்துவர்கள் நல வாரியத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். 60வயது பூர்த்திஅடைந்த சித்தா ஹோமியோபதி டாக்டர்களுக்கு பென்சன் தொகையை 3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் தமிழக ஹோமியேபதி சித்தா டாக்டர் சங்க நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட தலைவர் நடராஜன் நன்றி கூறினர்.