Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டத்தில் ”தந்திரதின விழா

சிவகங்கை மாவட்டத்தில் ”தந்திரதின விழா

சிவகங்கை மாவட்டத்தில் ”தந்திரதின விழா

சிவகங்கை மாவட்டத்தில் ”தந்திரதின விழா

ADDED : ஆக 16, 2011 11:34 PM


Google News
சிவகங்கை : கிராம தான நிர்மாண சங்கத்தில் பொது செயலாளர் உறுமத்தான் கொடியேற்றினார். ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், இலுப்பக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அழகர்சாமி, நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன், ஸ்டெல்லாமேரி, ஜோதிலட்சுமி பங்கேற்றனர்.

*கோவானூர் உழவர் மன்றத்தில், கிராம தான நிர்மாண் சங்க பொது செயலாளர் உறுமத்தான் கொடியேற்றினார். ஊராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்போஸ்கோ, உழவர் மன்ற செயலாளர் செந்தில்குமார், பொரு ளாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.

* கீழக்கண்டனி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் பெருமாள் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை நாகராணி, ஆசிரியர் சூசை பங்கேற்றனர்.

* பிரவலூர் நடுநிலைப்பள்ளியில், ஊராட்சி தலைவர் முருகன் கொடியேற்றினார்.

* அரசனூர் ப்ரீத்தி கல்வி நிறுவனத்தில், மதுரை வானொலி நிலைய செய்தி அமைப்பாளர் பூர்ணகுமார் கொடியேற்றினார். தாளாளர் அந்தோணிஜோ ராஜா, முதல்வர் தென்றல்மீனா, கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆறுமுகம், துணை முதல்வர் அன்பழகன் பங்கேற்றனர்.

*மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக்.,பள்ளியில் சுப்ரீம் லயன்ஸ் சங்க தலைவர் கண்ணப்பன் கொடியேற்றினார்.

*இடையமேலூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில், ஊராட்சி தலைவர் சுந்தம்மாள் கொடியேற்றினார்.

திருப்புத்தூர்: சேவினிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்

பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார்.

* கீழப்பூங்குடி நியுசெஞ்சுரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நிறுவனர் அபிமன்யு

கொடியேற்றினார். தாளாளர் லதா முன்னிலை வகித்தார்.தலைமையாசிரியர் சுமதி வரவேற்றார்.துணை முதல்வர் விஜி சோமசுந்தரம் நன்றி கூறினார்.

* கிளை நூலகத்தில் நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் தலைமை வகித்தார். புரவலர் பரமானந்தம் கொடியேற்றினார்.

*பாபா அமீர்பாதுஷா மெட்ரிகுலேசன் பள்ளி செயலர் சுலைமான் பாதுஷா வரவேற்றார். தாளாளர் அமீர்பாதுஷா சிறப்புரையாற்றினார். லயன்ஸ் நிர்வாகி சந்திரன் கொடியேற்றினார்.

*பிஸ்மி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளர் பீர்முகமது கொடியேற்றினார். தலைமையாசிரியை ஆயிஷா பேகம் முன்னிலை வகித்தார்.

* திருப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சாக்ளா கொடியேற்றினார். செயல் அலுவலர் அமானுல்லா முன்னிலை வகித்தார்.

*தேவகோட்டை ஜமீன்தார் தெரு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமையில் லயன்ஸ் தலைவர் தட்சிணாமூர்த்தி கொடியேற்றினார். மாவட்ட தலைவர் பழனியப்பன் , வளர்ச்சிக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியை சித்ரா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us