/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
ADDED : ஆக 22, 2011 10:51 PM
வில்லியனூர் : புதுச்சேரி செங்கல், மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க துவக்க விழா வில்லியனூர் லட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது.
சங்க ஆலோசகராக அழகானந்தம், தலைவராக மதியழகன், செயலாளராக ஜானகி, பொருளாளராக மனோகர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், திருட்டுத்தனமாக மணல் எடுப்பதை, அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். டிராக்டர்களில் செங்கல் ஏற்றிச் செல்வதை தடை செய்ய வேண்டும். நலிந்து வரும் லாரி தொழிலை நிலைநிறுத்த மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வர வேண்டும். அதிகமாக உள்ள லாரி இன்சூரன்ஸ் பிரிமியத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


