ஜெட் ஏர்வேஸ் விமான கட்டணம் இன்று முதல் உயர்வு
ஜெட் ஏர்வேஸ் விமான கட்டணம் இன்று முதல் உயர்வு
ஜெட் ஏர்வேஸ் விமான கட்டணம் இன்று முதல் உயர்வு
ADDED : செப் 16, 2011 11:19 PM

புதுடில்லி: விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, விமானக் கட்டணமும் உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமானங்களுக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு 1,429 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை உயர்த்த, விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானக் கட்டணத்தை 200 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும், கிங் பிஷர், ஏர் இந்தியா விமான நிறுவனங்களும், கட்டண உயர்வு குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளன.