/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 23, 2011 01:07 AM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி ஒன்றியம் கொல்லப்பள்ளி கிராமத்தில் பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் கிரியா ஊக்கி திட்டத்தின் கீழ் பட்டு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கதிர்வேலு தலைமை வகித்தார். வேப்பனப்பள்ளி ஆய்வாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். மத்திய பட்டு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி மாசிலாமணி புழு வளர்ப்பு, மருந்தடிப்பு, தோட்டபராமரிப்பு, மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், கிருஷ்ணகிரி வித்தக உதவி இயக்குனர் அழகேசன் பட்டு முட்டைகள் அடைகாத்தல் மற்றும் பட்டு முட்டைகள் கையாளும் முறை குறித்து விளக்கி பேசினார்கள். வனவர் சுப்பிரமணி வனக்குழுக்கள் மூலம் பட்டுவளர்ப்பில் பயன்கள் குறித்து பேசினார். உதவி இயக்குனர் கதிர்வேலு பட்டுவளர்ச்சி துறையில் அரசின் நலதிட்ட உதவிகள், மானியங்கள் மற்றும் வெண்பட்டுவளர்ப்பு, மரமல்பரி வளர்த்தல், ஊசி ஈ கட்டுப்படுத்த தைமஸ் ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறை குறித்து விளக்கி பேசினார். முகாமில், கொல்லபள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பட்டு விவசாயிகள் பலர் கல்நது கொண்டனர். இவர்களுக்கு பட்டு வளர்ப்பு கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி, கோவிந்தராஜ், நாராயணசாமி, வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். இளநிலை ஆய்வாளர் மோமீன்கான் நன்றி கூறினார்.