Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி பணி:மாவட்ட ஊராட்சி தலைவர் தகவல்

கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி பணி:மாவட்ட ஊராட்சி தலைவர் தகவல்

கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி பணி:மாவட்ட ஊராட்சி தலைவர் தகவல்

கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி பணி:மாவட்ட ஊராட்சி தலைவர் தகவல்

ADDED : செப் 27, 2011 12:16 AM


Google News

சிவகங்கை':மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (வடக்கு) உறுப்பினர் பதவிக்கு அரசனூர் பாண்டியன் சிவகங்கையில் நேற்று வேட்பு மனு செய்தார்.

இவர் ஏற்கனவே இந்த வார்டு உறுப்பினராக உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஊராட்சி தலைவராகவும், மாவட்ட திட்ட குழு தலைவராக இருந்து வருகிறார்.



மனுதாக்கல் செய்த பாண்டியன் கூறுகையில், '' அனைத்து ஊராட்சிகளுக்கும் மக்கள் நலத்திட்ட பணியில், அடிப்படை வசதிகளான புதிய சாலைகள் அமைத்தல், கிராம சாலைகளை மேம்படுத்துதல், தார்சாலைகள் போடுதல், புதிய ரேஷன் கடைகள், கிராம ஊராட்சிக்கான கட்டட வசதிகள் உள்ளிட்டவைக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்த 10 கோடி ரூபாய் வரை நிதி பெற்று அதற்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

படமாத்தூர், மாத்தூர் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலைகள், கண்ணாயிருப்பு பகுதியில் தார்சாலை, சுந்தரநடப்பு, கூத்தாண்டம் அகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசு திட்டமான ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் 40 லட்ச ரூபாயில் மண் சாலை, புதிய ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறுகள், சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல், சிறு பாலங்கள், ஊராட்சி கண்மாய்களில் மடை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் கட்சி பாகுபாடின்றி செய்யப்பட்டுள்ளது. விருப்பு வெறுப்பு இன்றி அனைத்து கட்சியினரையும் அரவணைத்து சென்றதால் மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி செய்துள்ளேன் என்பதால் இம்முறை வெற்றி நிச்சயம், '' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us