ADDED : ஜூலை 16, 2011 02:36 AM
செஞ்சி:மேல்காரணையில் அபிராமி ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
நடந்தது.விழுப்புரம் தாலுகா மேல்காரணை கிராமத்தில் உள்ள அபிராமி ஈஸ்வரர்
கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த
12ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி ஹோமம், வாஸ்த்து
சாந்தி, பிரவேச பலி செய்தனர்.மறுநாள் (13ம் தேதி) காலை வாஸ்த்து சாந்தி,
இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்தனர். நேற்று முன்தினம் காலை 8.30
மணிக்கு கடம் புறப்பாடும், 9.15 மணிக்கு அபிராமி ஈஸ்வரர், முத்தாம்பிகை,
விநாயகர், முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.