/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுதந்திர தின விழா வாகன நிறுத்துமிடம் போக்குவரத்து எஸ்.பி., அறிவிப்புசுதந்திர தின விழா வாகன நிறுத்துமிடம் போக்குவரத்து எஸ்.பி., அறிவிப்பு
சுதந்திர தின விழா வாகன நிறுத்துமிடம் போக்குவரத்து எஸ்.பி., அறிவிப்பு
சுதந்திர தின விழா வாகன நிறுத்துமிடம் போக்குவரத்து எஸ்.பி., அறிவிப்பு
சுதந்திர தின விழா வாகன நிறுத்துமிடம் போக்குவரத்து எஸ்.பி., அறிவிப்பு
ADDED : ஆக 14, 2011 02:49 AM
புதுச்சேரி : சுதந்திர தின விழாவிற்கு வருவோர், வாகனங்களை நிறுத்த வேண்டிய
இடங்கள் குறித்த தகவலைபோக்குவரத்து எஸ்.பி., வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து
போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுதந்திர
தின விழா நாளை (15ம் தேதி) உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில்
நடக்கிறது. அழைப்பிதழ் பெற்றவர்கள் வம்பாகீரப்பாளையம் ரோடு வழியாக, விழா
திடலுக்கு வர வேண்டும். கார் அனுமதி பெற்ற வாகனங்கள் வம்பாகீரப்பாளையம்
சாலை வழியாக, மைதானத்தின் வடக்கு பக்கம் கேட் எண் 1 வழியாக வந்து
ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.
அணி வகுப்பில் பங்கேற்கும்
போலீசார், மாணவர்கள் தங்கள் வாகனங்களை வம்பாகீரப்பாளையம் சாலையில் உள்ள
பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும்.சைக்கிள்,
மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை வம்பாகீரப்பாளையம் சாலையில் அதற்காக
ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி பூட்டிவிட்டு செல்ல வேண்டும். இரு சக்கர
வாகனங்களை பெத்தி செமினார் ஆரம்ப பள்ளி திடலிலும், கார் மற்றும் இதர
வாகனங்களை உப்பளம் புதிய துறைமுக திடலிலும் நிறுத்த வேண்டும்.கடற்கரை
சாலையில் காலை 6 முதல் 11.30 மணி வரை, மாலை 4 முதல் இரவு 10 மணி வரை
வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. கடற்கரை சாலை, துமாஸ் வீதி, பாரதி பூங்கா,
ராஜ்நிவாஸ் பகுதியில் இரு சக்கர வானங்களை தவிர எந்தவித வாகனங்களையும்
நிறுத்தக் கூடாது. சட்டசபை, பொது மருத்துவமனை மேற்கே உள்ள பெரிய
வாய்க்காலின் மீது மூடப்பட்டுள்ள பகுதி மீது வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.