/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பேச்சு பயிற்சி மையத்தில் குழந்தைகள் சேர்க்கைபேச்சு பயிற்சி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை
பேச்சு பயிற்சி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை
பேச்சு பயிற்சி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை
பேச்சு பயிற்சி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை
ADDED : செப் 06, 2011 12:01 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள பேச்சு பயிற்சி மையத்தில், குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது.
நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத ஒன்று முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மையத்தில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்றுவருகின்றனர். நடப்பாண்டு இம்மையத்தில் பேச்சுப்பயிற்சி பெற, குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் குழந்தைகளை இம்மையத்தில் சேர்த்து பயிற்சி பெற்று பயனடையுமாறு இம்மையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம் : தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் வரவேற்றார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவி பாலசுந்தரி பேசினார். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை, அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளிலும் உடற்கல்வியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.