Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பனை மரங்களை பாதுகாக்க ஊர்வலம் கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

பனை மரங்களை பாதுகாக்க ஊர்வலம் கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

பனை மரங்களை பாதுகாக்க ஊர்வலம் கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

பனை மரங்களை பாதுகாக்க ஊர்வலம் கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News

கடலூர் : பனை, தென்னை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிரசார ஊர்வலம் நடத்துவது என கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாநில கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைப்பாளர்கள் ரவிக்குமார், தங்கராசு, இந்திய விவசாயிகள் நலச்சங்க தலைவர் குருசாமி, ம.தி.மு.க., வெளியீட்டு அணி செயலர் வந்தியத்தேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பனை தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் வரும் ஜனவரியில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பிரசார ஊர்வலம நடத்துவது. முடிவில், தமிழகத்தில் 'கள்'ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட'கள்' டாப்பாக்களிலும், பாட்டில்களிலும் அடைத்து இரண்டு ஆண்டுகள் கெடாத வகையில் உள்நாட்டிலும், உலக அள விலும் சந்தைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் வரை டாஸ்மாக் விற்பனை மதுக்கள் அனைத்தும் பனை தென்னை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதல்வரிடம் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us