/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வுஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு
கிருஷ்ணகிரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் முனுசாமி ஆய்வு செய்தார்.
அதன்பின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மகேஸ்வரன், குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளுடன் அமைச்சர் முனுசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள், ''தொகுப்பு ஒன்றில் 38 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது; அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் கூடுதலாக 11 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விடும்; காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று மடத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் அனுப்ப ஆறு ராட்சத மின்மோட்டார்கள் மற்றும் பம்புகள் தயார் நிலையில் உள்ளது, '' என தெரிவித்தனர்.
அமைச்சர் முனுசாமி, ''நவம்பர் 11ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீரேற்றும் பணியை துவங்க கூடிய அளவுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தொகுப்பு இரண்டில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் 60 சதவீதம் பணியை முடிக்க வேண்டும்,'' என்றார்.
பின் அமைச்சர் முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை 2012ம் ஆண்டு முடித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைப்பார். இதனால், ஐந்து தொகுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில் சிறப்பாக நடக்கிறது.


