/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரம்உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரம்
ADDED : செப் 17, 2011 02:57 AM
கன்னியாகுமரி : உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று பேரூராட்சிகளின் இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.கன்னியாகுமரியில் 14.75 கோடி ரூபாய் செலவில் மெகா சுற்றுலா பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் சந்திரசேகர் நேற்று கன்னியாகுமரி வந்தார். மெகா சுற்றுலா பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரியில் 14.74 கோடி ரூபாய் செலவில் 19 மெகா சுற்றுலா பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கடல் சங்கமத்தில் புனித யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கும்பேது உயிர்பலி ஏற்படுவதை தடுக்க 40 லட்சம் ரூபாய் செலவில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 30 லட்சம் ரூபாய் செலவில் சுனாமி நினைவு பூங்காவும், 40 லட்சம் ரூபாய் செலவில் காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோண வடிவ பூங்காவும் சீரமைக்கப்படுகிறது.வியூ டவர் அருகில் இருந்து சன்செட் கடற்கரை வரை 330 மீட்டர் நீளமுள்ள கடற்கரையை 5.50 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்படும். இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 561 பேரூராட்சிகள் இருந்தது. தற்போது மறு சீரமைப்பில் 32 பேரூராட்சிகள் குறைக்கப்பட்டு 529 பேரூராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒட்டன்சத்திரம், காங்கயம் பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. 30 பேரூராட்சிகள் அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியுடன் எட்டு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் பேரூராட்சிகளில் வாக்காளர்கள் இரண்டு ஓட்டுகள் போடவேண்டும். தற்போது போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது போல் இந்த தேர்தலிலும் பயன்படுத்தப்படும். இந்த பணியில் தேசிய தகவல் மையம் ஈடுபட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் நியமிப்பார்.தமிழகத்தில் உள்ள 529 பேரூராட்சிகளிலுமாக 8 ஆயிரத்து 303 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆயிரத்து 200க்கும் மேல் வாக்காளர்கள் இருந்தால் வாக்குச்சாவடி இரண்டாக பிரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக ஆய்வின்போது மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி பஞ்., செயல் அலுவலர் பழனிசாமி, உதவி செயற் பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் மகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.