/உள்ளூர் செய்திகள்/சென்னை/நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறிநிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி
நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி
நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி
நிலம் கையகப்படுத்துவதில் வருவாய் துறையினர் தாமதம் : மவுன்ட் - மேடவாக்கம் சாலை விரிவாக்கம் இழுபறி
நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதால், மவுன்ட்மேடவாக்கம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் இழுபறியில் உள்ளன.
ஒரு சில இடங்களில் மட்டுமே, சாலை அகலமாக இருக்கும். இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணிகள் டெண்டர் விடப்பட்டன. மொத்தம் 14 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், ஆதம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வாணுவம்பேட்டை, வாணுவம்பேட்டைமடிப்பாக்கம், மடிப்பாக்கம்கீழ்கட்டளை, கீழ்கட்டளைகோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம் மேடவாக்கம் கூட்ரோடு என, ஐந்து செக்டராக பிரிக்கப்பட்டன. தற்போது இந்த சாலை 10.5மீட்டர் முதல் 16.7மீட்டர் வரை அகலம் உள்ளது. இதை ஒரு சீராக 22 மீட்டர் அகலமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஐந்து செக்டரிலும் சேர்த்து மொத்தம், 25 ஆயிரத்து 748 சதுரமீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது.
- கே.எஸ்.வடிவேலு -


