வீர செயல் புரிந்த 930 போலீசாருக்கு விருது
வீர செயல் புரிந்த 930 போலீசாருக்கு விருது
வீர செயல் புரிந்த 930 போலீசாருக்கு விருது
UPDATED : ஆக 15, 2011 09:22 AM
ADDED : ஆக 15, 2011 06:10 AM
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த போலீசார் சுமார் 930 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வீர செயல் புரிந்த போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுகிறது. அதே போல் இந்தாண்டும் வழங்கப்பட உள்ள ஜனாதிபதி விருது பெறுவோர் பட்டியலில் மத்திய ரிசர்வ் படையினர் முதலிடத்திலும் , மணிப்பூர் மாநில போலீசார் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தொடர்ந்த பிற மாநிலங்களை சேர்ந்த போலீசார் உட்பட 930 பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.