/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு ஏற்புகாங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு ஏற்பு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு ஏற்பு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு ஏற்பு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு ஏற்பு
ADDED : செப் 17, 2011 10:37 PM
காஞ்சிபுரம் : ''காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல், விருப்ப மனு கொடுக்கலாம்,'' என, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை விவரமாவது:காங்கிரஸ் கட்சி சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள, வேணு மகால் திருமண மண்டபத்தில், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
மாவட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு, 3 ஆயிரம் ரூபாய், நகராட்சித் தலைவர் பதவிக்கு, 5 ஆயிரம் ரூபாய், நகராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஆயிரம் ரூபாய், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு, 500 ரூபாய், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிடுவோர், கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். அவற்றை பூர்த்தி செய்து, மாவட்டத் தலைவர், எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழுவிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.