/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கட்சிகள் தனித்து போட்டி அறிவிப்புதேர்தலில் நிற்க தயங்கும் கட்சியினர்கட்சிகள் தனித்து போட்டி அறிவிப்புதேர்தலில் நிற்க தயங்கும் கட்சியினர்
கட்சிகள் தனித்து போட்டி அறிவிப்புதேர்தலில் நிற்க தயங்கும் கட்சியினர்
கட்சிகள் தனித்து போட்டி அறிவிப்புதேர்தலில் நிற்க தயங்கும் கட்சியினர்
கட்சிகள் தனித்து போட்டி அறிவிப்புதேர்தலில் நிற்க தயங்கும் கட்சியினர்
ADDED : செப் 25, 2011 10:00 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து
போட்டியிடுவதால் முக்கிய பிரமுகர்கள் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
தனித்து போட்டியிடுகின்றன. கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றுவிடலாம், என,
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தேர்தல் பணியை துவக்கியவர்கள், தற்போது
கட்சிகளின் முடிவால் தயக்கம் காட்டி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்
நகராட்சி, ஒன்றியங்களில் கடந்த முறை தனது கூட்டணி கட்சிகளின் பலத்தால்
தி.மு.க,, பதவியை கைப்பற்றியது. கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.,
புதிய தமிழகம், கம்யூ., கட்சிகளின் பலத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம், ஒன்றியங்களில் தே.மு.தி.க., புதிய தமிழகம்
கட்சிகளுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. அக்கட்சியின் ஓட்டுகள் அ.தி.மு.க.,
விற்கு சாதகமாக இருந்து வந்தது. இந்நிலையில், தனித்து போட்டியிடுவதால், சில
இடங்களில் அ.தி.மு.க., விற்கு ஏற்படும் சிக்கலை தவிர்க்க ,அக்கட்சியினர்
தீவிரமாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதே போல் தி.மு.க.,விலிருந்த
காங்., தனித்து போட்டியிடுவதால் ,அக்கட்சியினரும் தீவரமாக பணியாற்றிவேண்டிய
நிலையில் உள்ளனர். தே.மு.தி.க., காங்., புதிய தமிழகம் கட்சியினரும்,
கூட்டணி பலத்தால் வெற்றி பெறலாம் என்ற நினைப்பில், தேர்தல் அறிவிப்பிற்கு
முன்பே பணியை துவக்கினர். தற்போது நிலை தலை கீழாக மாறியதால்முக்கிய
பிரமுகர்கள் பலர் போட்டியிட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.