விரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சலே
விரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சலே
விரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சலே
ADDED : ஆக 17, 2011 03:42 AM
சானா: எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், தேர்தல் நடத்தவும் தயார் அதற்காக விரைவில் நாடு திரும்புவேன், அதிபராக பொறுப்பு ஏற்பேன் என ஏமன் அதிபர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டில் கடந்த 33 வருடங்களாக ஆட்சி செய்து வந்தார் அதிபர் அலிஅப்துல்லா சலே. தற்போது அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கிளர்ச்சியாளர்கள் அதிபர் மாளிகை மீது நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அதிபர் சலே, பிரதமர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் சவூதி அரேபியா தப்பிச்சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரதமர் கடந்த வாரம் குணமடைந்தார். அதிபர் சலே உடல் முழுவதும் 40 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால், சிறப்பு சிகிச்சைக்கு பெற்றார். தற்போது குணமடைந்துள்ளார். நேற்று சவூதி அரேபியாவில் டி.வி. வாயிலாக ஏமன் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஏமன் நாட்டின் அரசியல் சிக்கல் தீர எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். நாட்டில் பொதுத்தேர்தலையும் சந்திக்க தயார். விரைவில் நாடு திரும்புவேன். இவ்வாறு அதிபர் சலே கூறினார்.


