/உள்ளூர் செய்திகள்/தேனி/கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு அதிகரிப்பு : கொலை, கொள்ளை, வழிப்பறிகடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு அதிகரிப்பு : கொலை, கொள்ளை, வழிப்பறி
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு அதிகரிப்பு : கொலை, கொள்ளை, வழிப்பறி
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு அதிகரிப்பு : கொலை, கொள்ளை, வழிப்பறி
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு அதிகரிப்பு : கொலை, கொள்ளை, வழிப்பறி
ADDED : ஆக 25, 2011 11:51 PM
மூணாறு : கேரளாவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு,பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றச்சம்பவங்கள் கடந்த ஆண்டுகளைக்காட்டிலும், இந்தாண்டு அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 363 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தாண்டு 201 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு 361 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இது வரை 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமை: பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சமூக அமைப்பினர், போலீசார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு 634 கற்பழிப்பு வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்தாண்டு இது வரை 546 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் மாணவிகளை கடத்தியதாக இது வரையிலும் 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை கடந்த ஆண்டு 184 ஆக இருந்தது.
வழிப்பறி, திருட்டு: கொலை, கற்பழிப்பு போன்றவற்றை தடுக்க முடியவில்லை என்ற போதிலும், வழிப்பறி, திருட்டு போன்றவை களையும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு 4,380 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு கடந்த ஜூன் இறுதி வரை 2,319 திருட்டுகள் நடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2010ல் 636 வழிப்பறி சம்பவங்கள் நடந்தள்ளன. இந்தாண்டு ஜூன் இறுதி வரை 481 வழிப்பறிகள் நடந்துள்ளது.