/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அ.தி.மு.க., வேட்பாளருக்காக 6 அமைச்சர்கள் ஓட்டுவேட்டைஅ.தி.மு.க., வேட்பாளருக்காக 6 அமைச்சர்கள் ஓட்டுவேட்டை
அ.தி.மு.க., வேட்பாளருக்காக 6 அமைச்சர்கள் ஓட்டுவேட்டை
அ.தி.மு.க., வேட்பாளருக்காக 6 அமைச்சர்கள் ஓட்டுவேட்டை
அ.தி.மு.க., வேட்பாளருக்காக 6 அமைச்சர்கள் ஓட்டுவேட்டை
ADDED : செப் 27, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர்
பரஞ்ஜோதிக்கு ஆதரவாக, ஆறு அமைச்சர்கள் ஓட்டு சேகரித்தனர்.
திருச்சி
மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று
திருச்சி ரோஷன் மஹாலில் நடந்தது. அமைச்சர்கள் வைத்திலிங்கம், செல்லூர்
ராஜூ, கோகுல இந்திரா, சிவபதி, உதயகுமார், செந்தில்பாலாஜி ஆகிய ஆறு
அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர், திருமண மண்டபத்தின் வாசலில் இருந்து,
சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் வரை, வேட்பாளர் பரஞ்ஜோதியுடன் ஒரே ஜீப்பில் சென்று
ஓட்டுவேட்டையாடினர். மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன்
உடனிருந்தார். கார்கள் அணிவகுப்பு: பிரச்சாரத்துக்கு சென்றபோது,
அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.,வினரின் கார்கள் நீண்ட
வரிசையில் அணிவகுத்தது. இதைக்கண்டு தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதா? என்று
மக்கள் ஆச்சரியமடைந்தனர். சாப்பாடு 'கட்': வழக்கமாக அ.தி.மு.க., நடத்தும்
கூட்டத்தில், மதிய விருந்து பலமாக இருக்கும். ஆளுங்கட்சியான பிறகு, மட்டன்
பிரியாணி போன்ற 'வெயிட்டான' விருந்து இருக்கும் என்று தொண்டர்கள் எண்ணினர்.
ஆனால், வெறும் மிக்ஸர், காபியோடு கூட்டம் முடிவடைந்து விட்டது. பலருக்கு
மிக்ஸரும் கிடைக்கவில்லை. கூட்டம் முடிந்து சாப்பிட சென்றவர்கள், விருந்து
இல்லாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
பத்திரிக்கையாளர்கள் பாவம்: செயல்வீரர்கள் கூட்டத்துக்குச் சென்ற
பத்திரிக்கையாளர்களுக்கு என்று தனியாக சேர்கள் ஒதுக்கப்படவில்லை.
கூட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கூட்டமாக நின்று கொண்டே செய்தி
சேகரிக்கும் நிலை ஏற்பட்டது.