ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
தமிழாசிரியர் பெரியசாமி வரவேற்றார். எஸ்.கே.பி., கல்விக்கழகச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். உடுமலை காந்திநகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யசாய் 'இலக்கியம் தரும் இன்பம்' என்ற தலைப்பில் பேசினார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் சேஷநாராயணன் நன்றி கூறினார்.