/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆசிரியர் கூட்டுறவு சங்க பேரவையில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்புஆசிரியர் கூட்டுறவு சங்க பேரவையில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
ஆசிரியர் கூட்டுறவு சங்க பேரவையில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
ஆசிரியர் கூட்டுறவு சங்க பேரவையில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
ஆசிரியர் கூட்டுறவு சங்க பேரவையில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 25, 2011 12:11 AM
புதுச்சேரி : அரசு ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்க ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் 10வது ஆண்டுப் பேரவைக்கூட்டம் நேற்று நடந்தது. பார்வதி திருமண நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அருணாசலம், பொருளாளர் ஜான் சேவியர் ராஜா, இயக்குனர்கள் வெற்றிவேல், அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2009-10 மற்றும் 2010-11ம் கல்வியாண்டில் மெட்ரிக்., எஸ்.எஸ். எல்.சி., பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்குப் பரிசும், சான்றிதழும் வழங் கப்பட்டது. பணி ஓய்வு, நல்லாசிரியர் விருது மற்றும் பாடப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில், தவணை தவறிய உறுப்பினர்களின் கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க அவர்கள் மீது மேல் நடவடிக்கை மேற்கொண்டு வசூல் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.