/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு நெல்லையில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு : கமிஷனர் அஜய் யாதவ் துவக்கினாஉள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு நெல்லையில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு : கமிஷனர் அஜய் யாதவ் துவக்கினா
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு நெல்லையில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு : கமிஷனர் அஜய் யாதவ் துவக்கினா
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு நெல்லையில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு : கமிஷனர் அஜய் யாதவ் துவக்கினா
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு நெல்லையில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு : கமிஷனர் அஜய் யாதவ் துவக்கினா
ADDED : செப் 22, 2011 12:51 AM
திருநெல்வேலி : உள்ளாட்சி தேர்தல் நெல்லை மாநகராட்சி தேர்தல்
அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை கமிஷனர் அஜய் யாதவ்
துவக்கிவைத்தார்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தல்
வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதி வாக்காளர்கள்
போட்டோவுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லையில் ஒரு
லட்சத்து 48 ஆயிரத்து 44 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 964
பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 8 வாக்காளர்கள்
இடம்பெற்றுள்ளனர். நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் 353
ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 73 ஆண்களுக்கான ஓட்டுச்சாவடிகளும், 73
பெண்களுக்கான ஓட்டுச் சாவடிகளும், ஆண், பெண்களுக்கு 207 ஓட்டுச்சாவடிகளும்
இடம்பெற்றுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடவுள்ள தேர்தல் வாக்குப்பதிவு
அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நெல்லை டவுனில் நடந்தது.
பயிற்சியை நெல்லை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், கமிஷனருமான அஜய் யாதவ்
துவக்கிவைத்தார். வாக்குச்சாவடிகளில் எப்படி பணியாற்றவேண்டும் என தேர்தல்
அலுவலர்களுக்கு உதவித் தேர்தல் அதிகாரிகள் விளக்கினர். நெல்லை மாநகராட்சியை
பொறுத்த வரையில் மேயர், கவுன்சிலர்களுக்கு மக்கள் ஓட்டளிக்கவேண்டும்.
வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவரும், 4 தேர்தல்
அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 5 பேர் பணியில் இருப்பர். நெல்லை மாநகராட்சி
தேர்தலில் மொத்தம் 2 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நகர்புறங்களில் முதல் முறையாக கவுன்சிலர் பதவிக்கு ஒரு எலக்ட்ராணிக் ஓட்டு
இயந்திரமும், மேயர் பதவிக்கு ஒரு ஓட்டு இயந்திரமும் பயன்படுத்தப்படுகிது.
உள்ளாட்சி தேர்தலில் எப்படி பணியாற்றவேண்டும் என்பதும், தேர்தல்
விதிமுறைகளும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு விளக்கப்பட்டது. இன்னும்
இரண்டு கட்ட பயிற்சிகள் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சியில் உதவி தேர்தல் அதிகாரிகள் பாஸ்கர், சாமுவேல் செல்வராஜ்,
கருப்பசாமி, சாந்தி, முத்துசாமி, முருகேசன், தேர்தல் துணை தாசில்தார் விமலா
ராணி, உதவி செயற்பொறியாளர் லெனின், உதவிவருவாய் அதிகாரி சங்கரன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.


